அதிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இருக்கிறது.. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

Jan 8, 2020, 11:49 AM IST

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்குப் பின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எல்லாம் நல்லதுதான். அமெரிக்காவிடம் உலகிலேயே சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் முன்பாக சொலெய்மணியுடன் இருந்த ஈராக்கின் தளபதி அபு மஹ்தியும் கொல்லப்பட்டார்.


இதையடுத்து, அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு ஆவேசமாக கூறியிருந்தது. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், ஈராக்கில் அல் அசாத், இர்பில் ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகளின் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி, ஈரான் தாக்குதல் நடத்தியது. இதை டெஹ்ரான் மற்றும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.


இந்நிலையில், அமெரிக்க நேரப்படி 7ம் தேதி இரவு 7 மணிக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லாம் நல்லதுதான். ஈராக்கில் 2 இடங்களில் உள்ள ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன. அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. இது வரை நடந்தது நல்லதுதான். நாம் உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் மற்றும் சிறந்த ராணுவத்தை கொண்டிருக்கிறோம். நாளை காலையில் விரிவான அறிக்கை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.READ MORE ABOUT :

Speed News

 • மும்பையில் கொரோனாவுக்கு

  நேற்று 36 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய  பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது. 

  Jul 1, 2020, 13:53 PM IST
 • டெல்லியில் 87 ஆயிரம் பேருக்கு

  கொரோனா பாதிப்பு

  டெல்லியில் நேற்று புதிதாக 2179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் இங்கு கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,348 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 62 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 2741 ஆக உள்ளது.

  Jul 1, 2020, 13:45 PM IST
 • மகாராஷ்டிராவில் ஒரே நாளில்

  4878 பேருக்கு கொரோனா

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை மொத்தம் ஒரு லட்ச்த்து 74,761 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 90,911 பேர் குணம் அடைந்துள்ளனர். இ்ம்மாநிலத்தில் 9 லட்சத்து 66,723 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

  Jul 1, 2020, 13:43 PM IST
 • ராஜஸ்தானில் 18 ஆயிரம் பேருக்கு

  கொரோனா தொற்று பாதிப்பு

  ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் நேற்று 354 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இது வரை மொத்தம் 18,014 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 413 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 

  ராஜஸ்தானில் இது வரை 8 லட்சத்து 24,213 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தனை சோதனைகளில் 18 ஆயிரம் பேருக்குத்தான் கொரோனா பரவியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 11 லட்சம் பரிசோதனைகள் செய்ததில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதே போல், தமிழகத்தில் கொரோனா பலியும் 1200 ஆக உள்ளது. 

  Jul 1, 2020, 13:40 PM IST
 • தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கு

  சி,பி.சி.ஐ.டி விசாரிக்க உத்தரவு

  சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த 2 பேர் மரணம் தொடர்பான தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால்,  வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். 

  Jun 30, 2020, 13:33 PM IST