சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 361 ஆக அதிகரிப்பு..

by எஸ். எம். கணபதி, Feb 3, 2020, 11:04 AM IST

சீனாவில் கொரோனா வைரஸ் நோய் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. இதன்பின், இந்த வைரஸ் நோய் சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு பரவியது. சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்த சீன வைரஸ் நோய் தாக்குதல் தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், நேற்று(பிப்.2) வரை சீனாவில் ஹுபெயர் மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது. உகான் நகரில் மட்டும் 2,103 பேர் சிகிச்சையில் உள்ளனர். சீனா முழுவதுமாக 16,600க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9618 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையே, சீனாவின் உகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள், ஏர்இந்தியா சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You'r reading சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 361 ஆக அதிகரிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை