இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா..

by எஸ். எம். கணபதி, Mar 25, 2020, 17:09 PM IST

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 24) வரை 4 லட்சத்து 22,759 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மொத்தம் 18,902 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்பட நாடுகளில் அதிகமாக இந்த நோய் பரவியிருக்கிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஏற்கனவே பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று பாதிக்கவில்லை என்று கூறப்பட்டது. தற்போது மீண்டும் சார்லசுக்கு சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை அரண்மனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a reply