மும்பை பாடகி மீது கொலை முயற்சி வழக்கு..

by Chandru, Mar 25, 2020, 15:12 PM IST

கொரோனா உறுதி செய்தும் அடங்க மறுப்பு..

இந்தி திரைப்படங்களில் பாடல்கள் பாடி இருப்பவர் கனிகா கபூர். சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் அவரிடம் அறிவுரை கூறினார். அதை காதில் வாங்காமல் தன் இஷ்டத்துக்கு பலரை நேரில் சென்று சந்தித்தார். அவரை போலீசார் பிடித்து மருத்துவ மனையில் சேர்த்தனர். மருத்துவ மனையிலும் தனக்கு செலப்ரிட்டிக்கான அந்தஸ்த்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் வம்பு செய்தார். நீங்கள் செலப்ரிட்டி என்றால் அதை வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் இங்கு நீங்கள் பேஷன்ட் அவ்வளவு தான் என்று கூறி அவரது வாயை அடைத்தனர்.

முன்னதாக கனிகா கபூர் நடத்திய இசை நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாஜி முதல்வர் வசுந்தரா மகன் துஷ்யந்த் கலந்துகொண்டிருக்கிறார். தனக்கு ஏற்பட்ட கொரேனா வைரஸ் தொற்றை மற்றவர்களுக்கும் பரப்பும் செயலில் ஈடுபட்ட கனிகா கபூர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய போலீசார் ஆலோசித்து வருகிறார்களாம்.


Leave a reply