விஜய் 65வது படம் டைரக்டர் யார்? இயக்குநர் குழப்பம் தீரவில்லை..

by Chandru, Mar 25, 2020, 23:30 PM IST

விஜய் நடிக்கும் 64வது படம் மாஸ்டர் ஆக உருவாகி திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

விஜய் 65வது படத்தை இயக்குவது யார் என்ற போட்டி நடந்துகொண்டிருக்கிறது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ், விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கும் ஆர். அஜய் ஞான முத்து ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது.

விக்கிப்பீடியாவில் அஜய்ஞானமுத்து விஜய் படம் இயக்குவதாக இருப்பதே இந்த குழப்பத்துக்குக் காரணம். இதற்கிடையில் புதுக்குழப்பமாக விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர்களில் இரண்டு பெயர்கள் அடிபட்டாலும் ஏ. ஆர். முருகதாஸ் பெயர்தான் முதலிடத்தில் உள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை