சமந்தாவின் நாய்க் குட்டி விளையாட்டு.. விதியே எனத் தூங்கும் கணவர்.

by Chandru, Mar 25, 2020, 23:35 PM IST

கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாடு வீட்டுக்குள் இல்லாமல் எப்போதும் ஷுட்டிங் டப்பிங் என்று சுற்றிக் கொண்டிருக்கும் சினிமா ஸ்டார்களை வீட்டுக்குள் கட்டிப்போட்டிருக்கிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் சில நடிகைகள் சமைக்கிறேன் பார் என்று வீட்டில் உள்ளவர்களைக் கதற விட்டுக்கொண்டிருக்கின்றனர். நடிகை சமந்தா வழக்கம் போல் கணவர் நாக சைதன்யாவை கலாய்த்துக் கொண்டிருக்கிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.

தூங்கிக்கொண்டிருக்கும் சைதன்யா மீது சமந்தாவின் நாய்க்குட்டி படுத்துத் தூங்கிக்கொண்டிருக்க அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சமந்தா குறும்புத்தனமாகப் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார் . அதைக் கண்டு நெட்டிசன்கள் இது ஒரு விளையாட்டா என்று சமந்தாவை வம்பிழுத்து வருகின்றனர்.


Leave a reply