இந்தியாவில் 656 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 13 ஆனது

by எஸ். எம். கணபதி, Mar 26, 2020, 11:53 AM IST

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 656 ஆக அதிகரித்துள்ளது.


உலகம் முழுவதும் 4 லட்சத்து 71,942 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் நோய், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியுள்ளது. இது வரை 21,297 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இன்று(மார்ச்26) காலை வரை 656 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் புதிதாக 94 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு தெரிய வந்துள்ளது. நோய் பாதித்தவர்களில் 43 பேர் குணமடைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மதுரையில் இறந்தவருடன் சேர்த்து நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக இருந்தது. இந்நிலையில், அகமதாபாத்தில் ஒரு பெண் இறந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.


Leave a reply