உலகம் முழுவதும் 7 லட்சத்து 24,592 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேருக்குப் பாதித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோய் கொரோனா வைரஸ், 198 நாடுகளில் பரவியுள்ளது. இன்று(மார்ச்30) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 லட்சத்து 24,592 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 34,017 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 52,076 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 26,719 பேருக்கு நோய்ப் பாதிப்பு அதிகமாகி, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.அமெரிக்காவில் இது வரை 1 லட்சத்து 42,592 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டில் 2489 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 97,689 பேர் பாதித்துள்ளனர். 10,779 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 81,470 பேருக்கு நோய் பாதித்துள்ளது. 3,304 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 80,100 பேருக்கு நோய் பாதிக்கப்பட்டது. 6,803 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனியில் 62,436 பேருக்கு நோய் பாதித்துள்ளது. 641 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 40,174 பேருக்கு நோய் பாதித்துள்ளது. 2,606 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 1071 ஆக உள்ளது. உயிரிழந்தவர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.