தீவிரவாதிகள் தாக்குதலுக்கு 276 பேர் பலி 500க்கும் மேற்பட்டோர் பலி

சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவில் நடந்த லாரி குண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Somalia, Bomb blast

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில், அந்நாட்டு அரசை கவிழ்த்துவிட்டு இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கம் கொண்ட, அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமான அளவில் இயங்கி வருகின்றன.

இதனால், அவ்வப்போது உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த தீவிரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர். மேலும், வெளிநாட்டினர் வந்து செல்லும் உணவகங்களை குறிவைத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Somalia, Bomb blast 1

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசு நகரின் அருகே ஹோடான் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலை குறிவைத்து சனியன்று தீவிரவாதிகள் சக்திவாய்ந்த லாரிகுண்டு தாக்குதல் நடத்தினர். அதில், 20-க்கும் அதிக மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை ஞாயிறன்று 276 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சுமார் 500 பேரில் பலரது நிலைமை கவலக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.