ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ ஆபேவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தான் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் 2 முறை இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கடுமையான நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை அளித்தும் நோயின் தீவிரம் குறையவில்லை.
இதையடுத்து அடுத்த வருடம் வரை அவரால் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறப்படுகிறது. ஜப்பானின் தேசிய பத்திரிகையான என்எச்கே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.