பீகாரில் சட்டசபைத் தேர்தலைத் தள்ளி வைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
ஆனால், கொரோனா பரவல் இன்னும் நீடிப்பதால், சட்டசபைத் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் தேர்தலை நடத்த முடிவு செய்திருக்கிறது.இந்நிலையில், பீகார் சட்டசபைத் தேர்தலைத் தள்ளி வைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தேர்தலைத் தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தது.