சவுதியில் வாட்ஸ்ஆப்புக்கு பதில் விரைவில் புதிய செயலி

by Nishanth, Sep 6, 2020, 16:23 PM IST

உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய கணக்கின் படி 180க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியன் பேர் இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாதான் வாட்ஸ்ஆப்பின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இந்தியாவில் 400 மில்லியன் பேர் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர் இதை பயன்படுத்தி வந்தாலும் இதில் உரிய பாதுகாப்பு இல்லை என்ற புகார் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் வாட்ஸ்ஆப் க்கு பதிலாக பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய புதிய ஒரு செயலியை உருவாக்கும் முயற்சியில் சவுதி அரேபியா ஈடுபட்டுள்ளது. இந்த புதிய செயலியை உருவாக்கும் பணியில் கிங் அப்துல் அசீஸ் நகர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களும், பொறியாளர்களும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சவுதி விஷன் 2030 என்ற திட்டத்தின்படி உருவாக்கப்பட்டு வரும் இந்த செயலியை சவுதி நாட்டினர் மட்டுமல்லாமல் அங்கு வசிக்கும் வெளிநாட்டினரும் பயன்படுத்தலாம். வெளிநாட்டு சர்வர்களுடன் இந்த செயலி இணைக்கப்படாது என்பதால் போனில் உள்ள நமது ரகசிய விவரங்கள் எதையும் யாரும் திருட வாய்ப்பில்லை என்றும் இந்த செயலி மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் தைரியமாக ஈடுபடலாம் என்றும் இந்த புதிய செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் கூறுகின்றனர்.


More World News

அதிகம் படித்தவை