பிக்பாஸ் ஆரவ்- நடிகை ராஹி இன்று திருமணம் முடிந்தது..கே.எஸ்.ரவிகுமார், பிந்து மாதவி நேரில் வாழ்த்து..

by Chandru, Sep 6, 2020, 16:30 PM IST

கமலின் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றவர் நடிகர் ஆரவ். இவருக்கும், கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஹிக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயமானதாக தகவல் வெளியானது.


தற்போது இவர்களது திருமணம் கொரோனா கட்டுபாடுகளுடன் நடந்திருக்கிறது. இன்று மதியம் 1.30 மணி அளவில் சென்னையில் இவர்கள் திருமணம் நடந்தது.
கொரோனா கட்டுபாடுகள் கடைபிடிக்கப்பட்டு குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். பிரபலங்களில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கல்யாண் மாஸ்டர். காயத்ரி ரகுராம், வையாபுரி, கணேஷ் மற்றும் ஆர்த்தி, தயரிப்பாளர் சுரபி மோகன், டைரக்டர் சரண், நடிகைகள் சுஜா வாருணி, சங்கீதா, பிந்து மாதவி, உளிளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் ஆரவ், இயக்குனர் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் மூலம் கதாநாயகனானார். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது ராஜபீமா படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கும் ஆரவ்வுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது அந்த கிசு கிசு பின்னர் பிசுபிசுத்துப்போனது.


More Cinema News