இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமை நினைவுகூறும் வகியில் டாக்டர் ஏ பி ஜே. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் இளைஞர்களுக்கான உலகளாவிய குறும்பட போட்டியை நடத்துகிறது. இதன் அதிகாரப்பூர்வ போஸ்டரை, பத்மபூஷன் இசைப்புயல் AR ரஹ்மான் தனது சமூகவலைதள டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏபிஜே அப்துல்கலாக்கு பெரும் அஞ்சலியாகவும், அவருக்கு வீடியோ வடிவிலான பெரும் ஆத்மார்த்த பதிவாகவும், இந்நாட்டில் அவரை ஆதர்ஷமாக கொண்டிருக்கும் மக்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இருக்கும். இப்போட்டி 18 வயதை கடந்த அனைவரும் கலந்துகொள்ளக்கூடியது.
குறும்படத்தின் அளவு 5 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகதேர்ந்த கலைஞர்களால் இக்குறும் படங்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. மிகச்சிறந்த மூன்று குறும்படங்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும் பல பிரிவுகளில் விருதுகள் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது. இவ்விழாவினை மிகப்பெரிய வெற்றி விழாவாக்க உங்கள் ஆதரவை எதிர் நோக்குகிறோம்.
டாக்டர் ஏபிஜேஅப்துல்கலாம் இண்டர் நேஷனல் பவுண்டேசன் உலகளாவிய குறும்பட போட்டியின் வெப்சைட்லிங்
https://www.apjabdulkalamfoundation.org/shortfilm/index