பிரபல நடிகருக்கு கொரோனா உறுதி.. பாலிவுட்டை சுழன்றடிக்கும் வைரஸ்..

by Chandru, Sep 6, 2020, 17:45 PM IST

பாலிவுட்டில் கடந்த மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் போன்றவர்கள் மற்றும் ஐஸ்வர்யாராயின் 7 வயது மகள் ஆராத்யா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். அத்துடன் பாலிவுட்டை விட்டு கொரோனா ஒட்டம் பிடித்துவிட்டது என்ற பலரும் எண்ணிய நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவருக்கு கொரோனா உறுதி ஆகி இருக்கிறது.
இந்தியில் ஜீரோ, பானிபட் நமஸ்தே இங்கிலாந்து போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் அர்ஜூன் கபூர். இவர் அஜீத்குமார் நடிக்கும் வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், மோனா கபூர் தம்பதிகள் மகன் ஆவார். அர்ஜூனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறித்த தனது இன்ஸ்டாகிராமில் அவரே தெரிவித்திருக்கிறார்.


அவர் கூறியிருப்பதாவது:
என்னை கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை சொல்ல வேண்டியது கடமை ஆகும். வைரஸ் தொற்று என்றாலும் உடல்நிலை நன்றாக இருக்கிறது. டாக்டர்கள் அறிவுரைப்படி என்னை நானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறேன். டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை எடுத்து வருகிறேன். நீங்கள் காட்டப்போகும் ஆதரவுக்கு முன்னதாகவே நன்றி கூறிக்கொள்கிறேன். அடுத்தடுத்த நாட்களில் எனது உடல் நிலை பற்றிய அப்டேட்கள் நானே தருவேன். இதுவொரு அசாதாரணமான நேரம். இந்த வைரஸ் தொற்றிலிருந்து நாம் அனைவரும் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு அர்ஜூன் கபூர் கூறி உள்ளார்.


More Cinema News