சீனாவின் இந்த விதைகளை பயன்படுத்தாதீர்” - அமெரிக்கா எச்சரிக்கை...!

by Loganathan, Sep 14, 2020, 12:16 PM IST

விவசாயிகளுக்கு இலவசமாக விதைகளை அனுப்பி உயிரி தாக்குதல் நடத்த சீனா தயாராகிறது என சந்தேகம் தெரிவித்துள்ளது அமெரிக்கா ‌.

சீனாவுக்கும் , அமெரிக்காவுக்கும் மறைமுக பொருளாதார தாக்குதல் இருந்தபோதும் அது பொதுவெளிக்கு வந்ததில்லை இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த போது சீனாதான் இதற்கு காரணம் என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியது . கொரோனா வைரசை உலகுக்கு பரப்பியது சீனாதான் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பல முறை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அமேசான் இணைய வழி விற்பனை தளத்தின் மூலம் சீனாவிலிருந்து , அமெரிக்காவின் சில விவசாயிகளுக்கு இலவசமாக கடுகு , லாவண்டர் , ரோஸ்மெரி , செம்பருத்தி , புதினா உள்ளிட்ட 14 வகையான விதைகள் கொண்ட பாக்கெட் அனுப்ப பட்டுள்ளது.

ஆர்டர் செய்யாமலேயே இந்த விதைகள் வந்து இருப்பதாக விவசாயிகள் அரசிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்த சம்பந்தப்பட்ட விற்பனையாளரை தளத்தில் இருந்து நீக்கியது அமேசான் .

அமெரிக்க விவசாயத்தை முடக்கவும் , உயிரியல் போர் தொடுக்கவும் சீனா இது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விதைகள் தற்போது பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் இது போல் பெறப்படும் இலவசமான விதைகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

READ MORE ABOUT :

More World News

அதிகம் படித்தவை