இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை - அரசியலுக்கு வா தலைவா பிரபல தொண்டர் அழைப்பு..!

by Chandru, Sep 14, 2020, 12:07 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிவித்ததுடன் தனது மன்றங்களை ஒன்றி ணைத்து ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறார். பாபா முத்திரையை தனது சின்னமாகவும் காட்டினார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதி யிலும் எனது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது.


அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்து அடுத்த ஒரு வருடம் நாட்டு நடப்பில் அதிக கவனம் செலுத்தினார். எந்த சம்பவம் நடந்தா லும் அது குறித்து கருத்து தெரிவித்தார். தூக்குக் குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் அவர் சொன்ன கருத்து அவரை சிக்களுக்குள்ளாக் கியது. அவர் சொன்ன கருத்துக்கு தனி நீதிபதி விளக்கம் கேட்டார். பின்னர் தனது குரலை சற்று அடக்கி வாசித்தார்.


ரஜினியை பா ஜ பின்னணியிலிருந்து இயக்குவதாகவும் அக்கட்சியில் சேர்வார் என்றும் ரஜினிபற்றி பலரும் பகிரங்கமாக கருத்து தெரிவித்தனர். அதற்கு ரஜினி தான் எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை. யாரும் என்னை இயக்க முடியாது ஆன்மிக அரசியல்தான் எனது இலக்கு என்றார்.


கொரோனா லாக்டவுனில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசாரால் அடித்து கொல்லப் பட்ட சம்வத்தில் ஆவேசம் அடைந்த ரஜினி சத்தியமாக யாராக இருந்தாலும் விடக் கூடாது என்று தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தனது மன்ற நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி களநிலவரம் பற்றி அறிந்து வருகிறார். கடைசியாக அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ரஜினி கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நான் முதல்வர் பதவிக்கு போட்டியிட மாட் டேன். அதற்கு பொருத்தமானவரை அடையாளம் காட்டுவேன் என்றார்.


ரஜினியின் இந்த முடிவு ஒட்டு மொத்த ரசிகர்களையும் அப்செட்டில் ஆழ்த்தியது. ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் ரஜினியின் தீவிர ஆதரவு நடிகர் அதே கோரிக் கையை விடுத்திருக்கிறார்.


ரஜினியின் ஆதரவு நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ரஜினிசார் தொடங்கும் கட்சியில் இணைந்து ஆன்மிக அரசியலில் ஈடுபடுவேன் என்று அறிவித்தார். ஆனால் பதவி எதுவும் இல்லாமல் ஏழை மக்களுக்கு பணியாற்று வேன், சேவைதான் கடவுள் என்றார். இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள மெசேஜில், முதல்வர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்ற தலைவர் (ரஜினிகாந்த்) தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். லாரன்ஸின் இந்த கோரிக்கை ரஜினி ரசிகர்களுக்கு ஊக்கத்தை தந்திருக்கிறது.


ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்று பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும். நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி என்ற பாட்சா வசன பாலிசியைத்தான் ரஜினி கையாண்டு வருகிறார். ஆனால் முதல்வர் ஆக மாட்டேன் என்ற இதுவரை பொதுவெளியில் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. கட்சி ஆரம்பித்து எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என்று ஒரு முறை கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறந்து வைத்து கூறி இருக்கிறார்.


அதுசரி தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது ரஜினி கட்சி எப்போது ஆரம்பிக்கப்போகிறார் என்ற கேள்வியும் பெரிதாக இருக்கிறது. வரும் டிசம்பர் 12ம் தேதி தனது பிறந்த நாளில் நல்ல முடிவு அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருகின்றனர். இல்லை அதற்கு முன்பே நவம்பர் மாதம் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று ஒரு தரப்பு கூறி வருகிறது. இதற்கிடையில் ரசிகர்கள் பல மாவட்டங்களில் ரஜினியை அரசியலில் ஈடுபட கேட்டு போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டி வருகின்றனர்.


இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை என்று ரஜினி பாணியில் பஞ்ச் வசனத்துடன் ஒட்டியிருக்கும் போஸ்டர்கள் நெட்டில் வைராகி வருகிறது.

இதையும் பாருங்க: விஜயின் அடுத்தப் படம், தனுஷ் - செல்வராகவன் காம்போ, சூர்யா படம் ஓடிடியில் மட்டும்தான் ரிலீஸ் ஆகுமா?"


More Cinema News