ஜோசுவா ஹுடகலுங் என்பவர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர். இவர் சவ பெட்டி செய்யும் தொழிலை செய்து வருகிறாா். கடந்த ஆகஸ்டு மாதம் இவர் வழக்கம் போல் வீட்டு வேலை பார்க்கும் பொழுது பலத்த சத்தத்துடன் பொருள் ஒன்று கூரையில் விழுந்ததுள்ளது. அருகில் குழந்தைகள் மனைவி என அனைவரும் இருந்தனா். இந்த சத்தத்தைகேட்டு அவர்கள் தெறித்து ஓடினர். பின்னர் சிறிதுநேரத்தில், விழுந்தது என்னவென்று என்பதை பயந்த நிலையில் போய் பாா்த்த போது ஃபுட்பால் சைஸில் கல் ஒன்று தரையில் புதைந்து கிடந்ததது.
இது தொடர்பாக பேசியுள்ள, ஜோசுவா ``எதோ பெரிய மரம் தான் விழுந்துவிட்டது என்று பயந்தோம். விழுந்தது கல் எனத் தெரிந்தத்த்தும் உடனே அதே மண்வெட்டி கொண்டு தோண்டி பார்த்தேன். பின்பு அது வீண்மீன் கல் என தெரிய வந்ததது. அதனை அமெரிக்க ஆராய்ச்சியாளா்களிடம் கொடுத்த போது அந்த வீண்மீன் கல் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு பழமையானது என அவர்கள் தெரிவித்தனர்" எனக் கூறியுள்ளார்.
இந்த வீண்மீன் கல்லை ஆராயச்சியாளர்களிடம் கொடுத்தன் வாயிலாக 1.8 மில்லியன் டாலரை பெற்றுள்ளாா் ஜோசுவா. இது ஜோசுவின் 30 ஆண்டுகால வருமானம் ஆகும். தற்போது ஜோசுவா தன் தேவைக்கான பணத்தை எடுத்துக் கொண்டு மீதியுள்ள பணத்தை வைத்து தன் கிராமத்தில் தேவலாயம் கட்ட போவதாக அவர் கூறியுள்ளாா். அதிர்ஷடம் கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்பார்கள் அது இது தானா மக்களே!