இந்தியாவை சேர்ந்தவா் மோனிகா ஷெட்டி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்ரேலியாவின் சிட்னி நகரத்திலிந்து 40 கிலோ மீட்டர்,தொலைவில் உள்ள வெஸ்ஷட் ஹாக்ஸ்டான் பகுதியின் புதர் காட்டில் இருந்து முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். பின்பு அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஐந்து முதல் பத்து நாட்கள் வரை அவரது முகம் அமிலத்தில் முக்கி எடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினா்.
பின்பு 28 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது பின்பு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்திய போது இவர் செவிலியராக பணிபுரிந்தவர் என்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் இவருக்கு 39 வயது என்பது மட்டுமே தெரியவந்தது. வேறு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
இதனால் இந்த வழக்கு காவல் துறைக்கு புரியாத புதிராகவே இருந்தது. அதனால் நியூ சவுத் வேல் அரசு இந்த வழக்கு பற்றிய முறையான விசாரணை மற்றும் துப்பு கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்தது. இந்த வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்க துப்பு கிடைக்கும் வகையில் இந்த அறிவிப்பை தெரிவித்தது காவல்துறை என செய்திகள் பல வெளி வந்துள்ளன.