ஆப்கானில் துப்பாக்கிமுனையில் பயணிகள் கடத்தல்

by SAM ASIR, Nov 26, 2020, 22:42 PM IST

ஆப்கானிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்கள் பயணிகளை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். கிழக்கு வார்டாக் மாகாணத்தில் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீஸ் செய்தி தொடர்பாளர் ஹாஜி முகமது ஆஃபியானி இதை தெரிவித்துள்ளார்.

கிழக்கு வார்டாக் மாகாணத்தில் ஜால்ரிஸ் மாவட்டத்தில் காபூல் நோக்கி சென்று கொண்டிருந்த வாகனங்களை திடீரென வழிமறித்து துப்பாக்கி முனையில் 28 பயணிகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ள அவர், தாலீபான் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். கடத்தப்பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து விடுவிக்கும் முயற்சி நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், தாலீபான் தீவிரவாதிகள் இது குறித்து கருத்து எதுவும் இன்னும் கூறவில்லை.

You'r reading ஆப்கானில் துப்பாக்கிமுனையில் பயணிகள் கடத்தல் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை