2019ல் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என்று எட்டு இடங்களில் பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இவர்களில் இந்தியர்கள் 10 பேரும் அடங்குவர். மேலும் 500 பேர் வரை காயமடைந்தனர். உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்றது., இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை நாடாளுமமன்றத்தில் விவாதம் நடந்தது. இதில் இன்னொரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஹரின் பெர்ணான்டோ, ``ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன், இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியாகி இருக்கிற தகவல் அரசுக்கு தெரியுமா" எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கொடுத்த பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, ``அரசுக்கு அது தெரியும். . நாடாளுமன்றத்தில் பணிபுரியும் சிலருக்கு தாக்குதலில் தொடர்பு இருக்கிறது என சந்தேகிக்கிறோம். அவர்கள் யார் என்ற ரகசியங்களை கூற முடியாது. எனினும்
தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 257 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார்.