திருவண்ணாமலையில் தடையை மீறி கார்த்திகை மகாதீபம் ஏற்றிய நடிகை

திருவண்ணாமலை மலையில் தடையை மீறி நடிகை சஞ்சிதா ஷெட்டி கார்த்திகை மகா தீபத்தை ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

by Balaji, Dec 7, 2020, 19:50 PM IST

திருவண்ணாமலையில் மலை மீது பக்தர்கள் ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றால் கார்த்திகை மகா தீபம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் வருவது கூட தடை செய்யப்பட்டிருந்தது.இருந்து நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை மட்டும் எப்படி மலைமீது ஏறி மகா தீபம் ஏற்றினார்?

இதற்காக அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விகள் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளன. மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் கேட்ட போது, இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மகா தீபத்தை காண பக்தர்கள் மலை ஏறி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிலர் மலை ஏறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்கின்றனர். மலை ஏறி வரும் பக்தர்களை தடுப்பதற்கு வனத்துறையினர் முக்கிய பாதைகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தடையை மீறி மலை மீது ஏறி செல்லும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நடிகை சஞ்சிதா ஷெட்டியை மலைக்கு அழைத்து சென்றது யார் என்பது தெரியவில்லை. உள்ளூர் பிரமுகரை யாரோ ஒருவர் துணையுடன் தான் அவர் மலைக்கு சென்றிருக்க முடியும் இதுகுறிச்சு உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை