ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரான அனுப் பகச்சி தெரிவிக்கையில், ஐசிஐசிஐ வங்கி சாரிபில் UPI பேமெண்ட் சார்பில் "I Mobile " எனும் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆஃப் மூலம் அனைவருக்கும் அவரவரின் UPI மூலம் பணம் அனுப்பலாம். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் UPI மூலம் நடக்கும் பரிமாற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக இந்திய தேசிய பணப்பரிமாற்றத்தின் மேலாண்மை இயக்குநரான திலீப் ஆஸ்பே தெரிவித்தார். மேலும் கூறுகையில், ஐசிஐசிஐ வங்கியின் இந்த முயற்சியை பாராட்டியதுடன் இந்த பேமெண்ட் முறைக்கு அனுமதி வழங்கியுள்ளார். இந்த ஆஃப் மூலம் ஐசிஐசிஐ வங்கி பயனாளர்களை தவிர்த்து, அனைத்து விதமான பயனாளர்களும் இந்த ஆஃப்பை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது இதன் சிறப்பம்சமாகும்.
அனைத்து UPI அப்ளிகேஷன்களை போலவே இந்த ஆஃப்பையும் பயன்படுத்தலாம்.பிளே ஸ்டோரில் இருந்து இந்த "I Mobile" ஆஃப்பை தரவிறக்கம் செய்து, பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை இணைத்துவிடலாம். இதன் பின் இந்த கணக்கிற்கான UPI ID தரப்படும். அதாவது பயனாளரின் பதிவு செய்யப்பட்ட எண்ணுடன் ஐசிஐசிஐ வங்கியின் யுபிஐ ஐடி தரப்படும். (xxxxxxxxxx.imb@icici). இந்த ஆஃப்பை அனைத்து விதமான வங்கி கணக்குகளுக்கும் பயன்படுத்தலாம். மேலும் அனைத்து விதமான பணபரிமாற்றத்தையும் தொடரலாம்.
பெட்ரோல் பங்க் பேமெண்ட், மருத்துவமனை, பார்மஸி மற்றும் பல்பொருள் அங்காடி போன்ற அனைத்து விதமான பயன்பாட்டுகளுக்கும் பயன்படுத்தலாம். மேலும் QR ஸ்கேன் வசதியும் இதில் உண்டு. கூடிய விரைவில் இந்த ஆஃப் மூலம் ஐசிஐசிஐ வங்கிக்கான சேமிப்பு கணக்கு திறத்தல், நிரந்தர வைப்புத் தொகை தொடங்குதல், சிபில் மதிப்பு தெரிந்து கொள்ளுதல், பயண டிக்கெட் பதிவு செய்தல், பரிசு பொருள் அனுப்புதல் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற அனைத்து வசதிகளையும் பெறலாம். I Mobile ஆஃப் பெறுவதற்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
https://play.google.com/store/apps/details?id=com.csam.icici.bank.imobile