அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி முன்னெப்போதுமில்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவூட்ட ஈரான் தொடங்கியுள்ளது. ஈரான் யூரேனியத்தை செறிவூட்டி, அளவுக்கு அதிகமான அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டுடனான அணுசக்தி உடன்பாட்டை ரத்து செய்து பொருளாதார தடை விதித்தார். இதனால், ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் டிரம்ப் காலத்தில் உச்சம் பெற்றது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார்.
புதிய அதிபராக தேர்வான ஜோ பைடன் இம்மாதம் பதவியேற்கவுள்ளார். ஜோ பைடன் மூலம் தடை செய்யப்பட்ட ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் கையெழுத்திட முயற்சி செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஏற்ப முழு இணக்கத்துடன் ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அந்த நாட்டு உடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். ஆனால், ஈரான் பேச்சுவார்த்தை குறித்து
கண்டுகொள்ளவில்லை. மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உலக நாடுகளுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி முன்னெப்போதுமில்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவூட்ட தொடங்கியுள்ளது. ஈரான் அரசின் செய்தி தொடர்பாளர் மெஹர் செய்தி நிறுவனத்திடம், தற்போது 20 சதவீத அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டி வருகிறது. கோம் பகுதியில் நிலத்துக்கடியில் இருக்கும் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தில் இந்த செறிவூட்டல் பணி நடந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதனை சர்வதேச அணுசக்தி முகமை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ஈரானின் அண்டை நாடான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், அணுஆயுதம் தயாரிக்கவிடமாட்டோம் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். ஈரானின் இந்த செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விதி மீறலானது ஜோ பைடனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கும் முயற்சி என்று என உலக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.