தாக்குப் பிடிப்பாரா புதிய அதிபர் பிடன்?

அணு ஆயுதத் தாக்குதல், ட்விட்டர் கணக்கு முடக்கம், பதவியேற்பு விழா புறக்கணிப்பு என வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் தருணத்திலும் சர்சைகளுடனே விடைபெற்றிருக்கிறார் ட்ரம்ப் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க மக்கள் புதிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அங்கு ஜனநாயக கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது . அணு ஆயுதத் தாக்குதல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள் ஒட்டுமொத்தமாக முடக்கம், பதவியேற்பு விழா புறக்கணிப்பு என ட்ரம்ப் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் படலமும் இன்னொரு புறம் நடந்து கொண்டிருக்கிறது .டொனால்டு ட்ரம்ப் வேறு வழியின்றி வெள்ளை மாளிகையே வெக்கேட் செய்து விட்டாலும் , அவர் உருவாக்கிய சர்ச்சைகள் அதன் விளைவுகள் இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என்றே தெரிகிறது.

புதிய அதிபரின் பதவியேற்பு விழாவின் போது கூட ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ செயலர் ரையன் மெக்கார்த்தி எச்சரித்திருந்தார். இதனால் பதவி ஏற்பு விழா நடக்கும் கேபிடல் ஹில் கட்டடம் 25,000 தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், போலீஸ் என ஏழடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்தது. கடும் கெடுபிடிகளுடன் ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ளார்.

பதவியேற்ற கையோடு பாரிஸ் பருவநிலை மாறுபாடு குறித்த உடன்படிக்கையில் இணைவது உள்பட பல உத்தரவுகளில் புதிய அதிபர் பைடன் கையெழுத்திட்டார். இதெல்லாம் சாதாரண விஷயங்கள் இனிமேல்தான் அதிபர் நிறையச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள் அமெரிக்க அரசியல் வல்லுனர்கள். காரணம் அந்த அளவிற்கு குளறுபடிகளைச் செய்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார். பிரசாரத்தின்போதே ஜோ பைடன், தான் அதிபரானால் டிரம்ப் ஏற்படுத்திய களைகளை அடியோடு அகற்றுவேன் என்று தெரிவித்தார்.பிடன் முன்னர் வரிசையாக நிற்கும் பிரச்சினையில் முதலிடத்தில் இருப்பது கொரோனா தொற்று. காரணம் உலக அளவில் இதனால் அதிக பாதிப்பை சந்தித்த நாடு அமெரிக்காதான்.இரண்டாவது அந்த நாட்டின் பொருளாதாரம். கொரோனா விவகாரத்தில் ட்ரம்ப்பின் அலட்சியப்போக்கால் தான் அமெரிக்கா இன்னும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் வீடு, உடமைகளை, வேலைகளை இழந்து அல்லல்பட்டு கிடக்கின்றனர். இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரமும் மிகப்பெரிய சீர்குலைவை சந்தித்திருக்கிறது. முதலில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில்தான் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்று அதிபர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

ட்ரம்ப் ஆட்சி தொடங்கிபோது இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்திருந்தார். அதனை உடனடியாக நீக்கப்போவதாக பைடன் அறிவித்திருக்கிறார்.வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் ட்ரம்ப்புக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல்கள் இருந்து வந்தது. இதனால், அணு ஆயுத விவகாரங்களில் அவர் வட கொரியாவை கடுமையாக எதிர்த்து வந்தார்.ஜோ பைடன் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்,யார் அதிபரானாலும் அமெரிக்கா எங்களது நிரந்தர எதிரிதான் அதில் மாற்றமில்லை என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையே கடந்த ஆண்டு நடந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க ஈரான் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இதை புதிய அதிபர் எப்படி சமாளிப்பார் என்று தெரியவில்லை? ராணுவத்தை மேம்படுத்த ஆயுதங்களை இறக்குமதி செய்வதைத் தவிர்த்து உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவாகி இருக்கிறது. சமீபத்தில் செனட் தாக்குதல் சம்பவத்தில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிலரும் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால், அதை களை எடுக்கும் பொறுப்பும் பைடனுக்கு இருக்கிறது.

ட்ரம்ப்பின் ஆட்சி முடிவுக்கு வந்தாலும் அவரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட விளைவுகளைச் சீரமைக்க பைடனுக்கு கொஞ்சம் அவகாசம் தேவை.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, பருவநிலை மாறுபாடு விவகாரத்தில் நடவடிக்கை ஆகிய நான்கு விஷயங்களை முதலில் கையில் எடுத்திருக்கிறார் பைடன் பதவியேற்றதும் பேசிய பைடன், நம்பிக்கை என்ற வார்த்தையை தனது பேச்சில் அழுத்தமாக பலமுறை குறிப்பிட்டார். பிளவுபட்ட அமெரிக்க மக்களை ஒன்றிணைத்து, நல்ல அதிபராக இருப்பேன் என்று நம்பிக்கையானவர் விதைத்திருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!

READ MORE ABOUT :