பாண்டிச்சேரியை பதற வைக்கும் லேடி தாதா பாஜகவில் இணைந்தது எப்படி?.

by Balaji, Jan 21, 2021, 17:58 PM IST

புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமு என்ற ராதாகிருஷ்ணன், தனது மனைவியான வினோதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து திருப்பட்டினம் என்ற ஊரைச் சேர்ந்த சேர்ந்த எழிலரசி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்த ராமு, 2012 ல் ஜாமீனில் வந்தார். அவர் மீது ஆத்திரத்தில் இருந்த முதல் மனைவியான வினோதா கூலிப்படையை ஏவி விட்டார். 2013 ஜனவரியில் எழிலரசியுடன் பைக்கில் வந்த ராமு கூலிப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவருடன் வந்த எழிலரசி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த கொலை தொடர்பாக வினோதா, ராமுவின் நண்பர் ஐயப்பன், வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. உடல் முழுக்க வெட்டுக் காயங்களுடன் உயிர் பிழைத்த எழிலரசி, தனது கணவரின் கொலைக்குக் காரணமான வினோதா மற்றும் அவருக்கு உதவிய ஐயப்பன், புதுச்சேரி முன்னாள் சபாநாயகரான வி.எம்.சி சிவகுமார், ராமுவின் சகோதரர் மற்றும் ஒரு வழக்கறிஞர் என அனைவரையும் பழிக்குப் பழி வாங்குவேன் என சபதம் போட்டு இருந்தாராம்.

சில மாதங்களில் ஐயப்பன், காரைக்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இவர்தான் எழிலரசியின் முதல் விக்கெட் முதல் முறையாக அந்த கொலை தொடர்பாக எழிலரசி கைதானார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி. சென்னையிலிருந்த ராமுவின் முதல் மனைவி வினோதாவை 2015 ஏப்ரல் 27ல் சீர்காழி அருகே புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை வழிமறித்து கூலிப்படை கொலை செய்தது. இந்த வழக்கிலும் எழிலரசியைக் கைது செய்யப்பட்டார். ஆனால் போதுமான சாட்சிகள் இல்லாததால் இந்த வழக்கில் எழிலரசி விடுதலையானார். 2017 ஜனவரி 3 அன்று நிரவியில் தான் கட்டிவரும் திருமண மண்டப வேலைகளைப் பார்க்கச் சென்ற புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமார், அந்தத் திருமண மண்டபத்துக்குள்ளேயே கூலிப் படையினரால் வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

புதுச்சேரியை பதற வைத்த இந்தக் கொலையை ராமுவின் கொலைக்கு பழிக்குப் பழியாகவே எழிலரசி செய்திருக்கிறார் என்று சொல்லும் காவல்துறை அவரைத் தேட ஆரம்பித்தபோது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் மீது குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் தாதா மணிகண்டனை சந்தித்து அடுத்த கொலைக்கு சதித் திட்டம் தீட்டிய தகவல் வெளியாகி அதிர்வை ஏற்படுத்தியது. பின்னர் ஜாமீனில் வெளிவந்த எழிலரசி மறைவிடங்களில் தங்கி, காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்தார். பின்னர், புதுச்சேரி விடுதி ஒன்றில் எழிலரசியைச் கைது செய்தனர் போலீசார். அவருடன் கைதான 14 பேரிக் வி.எம்.சி சிவகுமாரைக் கொலை செய்து தலைமறைவாக இருந்த விக்ரமன் என்பவரும் ஒருவர். இதன் பின் மீண்டும் வெளியே வந்த எழிலரசி, நிரவி பகுதியில் இருந்து வந்தார். அப்போது போலீசார் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் சொன்னதுதான் அதிர்ச்சி ரகம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்கால் நிரவி தொகுதியில் நான் போட்டியிடப் போகிறேன். அது கட்சி சார்பாகவா சுயேச்சையா என்பது பற்றி தேர்தல் வரும்போது முடிவெடுப்பேன் என்று சொல்லி அதிர வைத்தார். அவரின் இந்த அறிவிப்பு புதுச்சேரி அரசியலில் சூட்டை கிளப்பியது . இதனால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அவர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது வெளியில் வந்திருக்கும் எழிலரசிதான், புதுச்சேரி பா.ஜ.க-வில் மாநிலத் தலைவர் சுவாமிநாதன் முன்னிலையில் திடீரென ஐக்கியமாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.புதுச்சேரியின் முன்னாள் விஐபி ஒருவரின் துணையோடு தான் எழிலரசி பாஜகவில் சேர்ந்து உள்ளார் என்றும் அவரது ரிஷி மூலம் கட்சி மேலிடத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் பதறுகிறார்கள் லோக்கல் பாஜகவினர். இன்னும் சிலர் எழிலரசியின் பயோடேட்டாவை மேலிடத்துக்கு கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தகவல்.

You'r reading பாண்டிச்சேரியை பதற வைக்கும் லேடி தாதா பாஜகவில் இணைந்தது எப்படி?. Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை