கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்கா புதிய சாதனை!

by Sasitharan, Apr 6, 2021, 11:32 AM IST

அமெரிக்கா தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது அமெரிக்கா. இதனை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன. அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதனால் திட்டமிட்டதை விட வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் புதிய சாதனையாக கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கவனித்து வரும் வெள்ளை மாளிகை டாக்டர் சைரஸ் ஷாப்பர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அமெரிக்காவில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்டுள்ளனர். 5 கோடியே 79 லட்சத்து 84 ஆயிரத்து 785 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.23 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.66 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28.735 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.

You'r reading கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்கா புதிய சாதனை! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை