நாட்டுக்கே இளவரசர்.. ஆனாலும் 30 பேர் தான்?!.. கொரோனாவால் அரச குடும்பம் சந்திக்கும் துயரம்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் உடல் நலக்குறைவால் சில நாட்களுக்குமுன் காலமானார். தனது வின்ஸ்டர் கேசில் அரசு மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனை இதை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதற்கிடையே, இவரின் உடல் வரும் நாளை உரிய இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட. இருக்கிறது.

இறுதி ஊர்வலத்திற்காக இளவரசர் பிலிப் தன் சொந்த கையாலேயே வடிவமைக்கப்பட்ட லேண்ட் ரோவர் சொகுசு ரக கார் தயார்படுத்தப்பட்டு உள்ளது. கார் பிரியரான இளவரசர் பிலிப் 15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தக் காரை அவர் மறுவடிவமைத்துடன், இதில் தான் இறுதி ஊர்வலம் அமைய வேண்டும் என்று கூறியிருந்தாராம். அதன்படி தற்போது நடக்க இருக்கிறது.

மறைந்த இளவரசர் பிலிப், 1921-ம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார். சுமார் 65 வருடங்கள் ராணிக்கு உதவியாக இருந்த பிலிப், கடந்த 2017-ம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில் இருந்து விடுவித்துக்கொண்டார். இவர் துடிப்பாக இருந்த காலத்தில் ராணியின் ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட வருடங்கள் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

இதற்கிடையே, இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்பவர்கள் குறித்த லிஸ்ட்டை அரச குடும்பம் வெளியிட்டுள்ளது. இதில், ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப்பின் நான்கு குழந்தைகள் மற்றும் எட்டு பேரக்குழந்தைகள், மறைந்த இளவரசி மார்கரெட்டின் குழந்தைகள் மற்றும் இளவரசர் பிலிப்பின் கிரேக்க மற்றும் ஜெர்மன் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் பெயர் இந்தப் பட்டியலில் இல்லை. மேகன் சமீபத்தில் அரசு குடும்பம் மீது இனவெறி குற்றச்சாட்டு சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதேபோல், ஊர்வலத்தில் இளவரசர் ஹாரி மற்றும் இளவரசர் வில்லியம் இருவரும் ஒன்றாக நடக்க மாட்டார்கள் என்றும் அரச குடும்பம் தகவல் வெளியிட்டுள்ளது. பொது மக்களுக்கு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ள அதேநேரம் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!

READ MORE ABOUT :