`க்ரிடிக்கல் கண்டிஷன்னு சொல்றாங்க.. விவேக் உடல்நிலை குறித்து நடிகர் மனோபாலா!

Advertisement

நகைசுவை நடிகர் விவேக், நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் பேசிய அவர், ``அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து பயம் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் நேராது. அனைவரும், முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள்" எனப் பேசியிருந்தார். இதற்கிடையே, நடிகர் விவேக்கிற்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இன்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட விவேக்கிற்கு படப்பிடிப்பு தளத்தில் வைத்து திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். இதை கேள்விப்பட்ட அவரது மனைவி மற்றும் மகள் அவரை அனுமதித்துள்ள வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, விவேக் உடல்நிலை தொடர்பாக அவரின் நெருங்கிய நண்பரும் நடிகருமாகிய மனோபாலா பேசியிருக்கிறார்.

அதில், ``நாங்கள் இருவரும் நேற்று ஒன்றாக தடுப்பூசிஎடுத்துக்கொண்டோம். ஆனால் காலையில் தான் விவேக் மாரடைப்பு குறித்த தகவல் தெரியும். எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாததால் அவரை நேரில் சென்று சந்திக்க முடியவில்லை. அவருடன் இருக்கும் நண்பரிடம் விசாரித்தேன்" என்றவர், ``கொஞ்சம் க்ரிடிக்கல் கண்டிஷன்னு சொல்றாங்க. சிகிச்சையில் இருக்கார். உடல்நலம் தேறி வர வேண்டும் அவர். விவேக் நிறையவே தைரியசாலி. இதற்கெல்லாம் அவர் பயப்பட மாட்டார். சீக்கிரமே நல்ல உடல்நலத்துடன் திரும்பி வருவார்”.என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>