அறிமுகமாகிறது அதிக தூரம் பறக்கும் விமானம்!

சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் நகருக்கு இடையில் நிற்காமல் 20 மணி நேரம் பறக்கக்கும் விமானம்

by Suresh, May 2, 2018, 22:02 PM IST

சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் நகருக்கு இடையில் நிற்காமல் 20 மணி நேரம் பறக்கக்கூடிய விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு இறுதியில் இயக்க இருக்கிறது.

நான்கு எஞ்ஜின்களை கொண்ட A340-500 வகை விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இயக்கி வந்தது. 100 பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் கொண்ட இவ்விமானங்கள் தொடர்ந்து 9,500 மைல் பறக்கத்தக்கன. இச்சேவை எதிர்பார்த்த வரவேற்பை பெறாததினால் 2013-ம் ஆண்டு கைவிடப்பட்டது.

அதைக் காட்டிலும் அதிக தூரம் பறக்கக்கூடிய A350-900ULR வகை விமானம், ஏப்ரல் 23-ம் தேதி சோதனை ஓட்டத்தை நடத்தியது. பிரான்ஸில் டௌலோஸில் உள்ள விமான பணிமனையிலிருந்து புறப்பட்ட இவ்விமானம் தொடர்ச்சியாக ஐந்து மணி நேரம் பறந்து திரும்பியது.

A350-900ULR வகை விமானம், வழக்கமாக A350 வகை விமானங்கள் பறப்பதைக் காட்டிலும் 1,800 மைல் தூரம் அதிகமாக 11,160 மைல் தூரம், ஏறத்தாழ 18,000 கிலோ மீட்டர் தூரம் பறக்கக்கூடியன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இவ்வகையில் ஏழு விமானங்களை வாங்க இருக்கிறது.

உலகின் மிக நீளமான விமான பாதையாக, சிங்கப்பூர் - நியூயார்க் இடையே நிற்காமல் விமானத்தை இயக்கிய பெருமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு கிடைக்க இருக்கிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அறிமுகமாகிறது அதிக தூரம் பறக்கும் விமானம்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை