ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் - உதறித்தள்ளிய டிரம்ப்

May 10, 2018, 09:12 AM IST
பராக் ஒபாமா ஆட்சிக்காலத்தில் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் முறித்துள்ளார். முன்பு இருந்த பொருளாதார தடைகளை ஈரான் மீது விதிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
ஈரான் அணுஆயுதம் உற்பத்தி செய்வதை தடை செய்யும் நோக்கில் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தின்போது 2015-ம் ஆண்டு, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் அமெரிக்கா மற்றும் ஈரானும் பொருளாதார ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. 
"இந்த ஒப்பந்தம் ஒருதலைசார்பானது. இது அமைதியையோ சமாதானத்தையோ கொண்டு வரவில்லை. இனியும் கொண்டு வராது," என்று கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா அந்த சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளார். "ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை குறித்து இதில் ஏதும் சொல்லப்படவில்லை. 2015-ம் ஆண்டுக்கு பிறகு அணுஆயுதம் குறித்து இது எவ்விதத்திலும் ஈரானை கட்டுப்படுத்தாது. ஏமன், சிரியா போன்ற நாடுகள் விவகாரத்தில் ஈரானின் நிலைப்பாட்டை இது எவ்விதத்திலும் தடுக்கவில்லை." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் வேறொரு புதிய ஒப்பந்தத்திற்காக தாம் பேசுவதற்கு தயார் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், ஈரான், "அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது; நேர்மையற்றது; சர்வதேச ஒப்பந்தத்தின் மாண்பை குலைப்பது," என்று கூறியுள்ளது.
ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுமானால் அதன் சர்வதேச எண்ணெய் விற்பனை பாதிக்கப்படுவதோடு, அந்நாடு சர்வதேச வங்கி பரிவர்த்தனையை பயன்படுத்தமுடியாத நிலையும் ஏற்படும்.
அமெரிக்காவோடு சேர்ந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஏனைய நாடுகள் தற்போது தாங்களாகவே வேறொரு முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் - உதறித்தள்ளிய டிரம்ப் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை