நியூயார்க் நகரின் முதல் பெண் சீக்கிய போலீஸ்- குர்சோச் கவுர்

Advertisement

நியூயார்க் நகரின் முதல் பெண் சீக்கிய போலீஸ் என்ற உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் குர்சோச் கவுர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகர போலீஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சியை நிறைவு செய்துள்ளார் கவுர். கடந்த வாரத்துடன் பயிற்சியை நிறைவு செய்து தற்போது முதல் பெண் சீக்கிய போலீஸ் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார் கவுர்.

இது குறித்து சீக்கிய அதிகாரிகளின் அமைப்பு ஒன்று கவுருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து கவுரவபடுத்தியுள்ளது. மேலும் கவுர் கூறுகையில், “சீக்கியர்கள் அமெரிக்காவில் உயர் பொறுப்புகளிலும் போலீஸ் துறையிலும் கால்பதிக்க வேண்டும். பெண்களாளும் முடியும் என்பதை உணர்த்தவும் அவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டியும் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்” என்றுள்ளார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அமைச்சரும் சீக்கியருமான ஹர்தீப் சிங் பூரி, குர்சோச் கவுருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Advertisement
/body>