“நாங்கள் நீச்சல் உடை சுற்றை இனி வரும் காலங்களில் நீக்குகிறோம். பை பை பிகினி” என ஹேஷ் டேக் உடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் மிஸ் அமெரிக்கா போட்டி நடத்தும் நிர்வாகக் கமிட்டியினர்.
“குட் மார்னிங் அமெரிக்கா” என மிஸ் அமெரிக்கா நிர்வாகக் குழுவின் தலைவர் க்ரெட்சன் கார்ல்ஸன் போட்டியின் அடித்தளத்தையே மாற்றம் செய்துள்ளார்.
கார்ல்ஸன் கூறுகையில், “இனி நாங்கள் அலங்கார அணிவகுப்பாக இருக்க மாட்டோம். இது நல்லதொரு போட்டி. இனிமேல் இந்தப் போட்டியில் போட்டியாளர்களின் உடல் அமைப்பை வைத்து அவர்களைத் தேர்வு செய்ய மாட்டோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும் கார்ல்ஸன் கூறுகையில், “நூறு ஆண்டுகள் பழமையான நீச்சல் உடை சுற்றும் மாலை நேர கவுன் சுற்றும் இனி நீக்கப்படுகிறது. இனிமேல் அவர்கள் மன நிலை, சமூக அக்கறை, சமூகத்தின் மீதான கருத்துகள் இவற்றின் அடிப்படையிலேயே மிஸ் அமெரிக்கா தேர்வு செய்யப்படுவார். அழகிப் போட்டிகளுக்கு வரும் போட்டியாளர்களின் திறமைகள், அவர்களது சாதனைகள் இதனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான வெற்றிக் கோப்பைகள் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
கூடுதலாக, “போட்டிக்கு வர விரும்பும் பெண்கள் பலர் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், திறமை இருக்கும் பலர் உயரமான ஹீல்ஸ், நீச்சல் உடை என வெளி அலங்காரம் செய்து கொண்டு தங்களை நிரூபிக்க விரும்பவில்லை. அதனால்தான் இனிமேல் அப்படி ஒரு சுற்று வேண்டாம் என முடிவு செய்துவிட்டோம்” எனக் கூறினார்.