சீன நாட்டின் தலைநகர் பீஜிங்கில் இருக்கும் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே குண்டுவெடிப்பு நடந்ததாகப் பரவிய செய்திக்கு சீன அரசு விளக்கம் வெளியிட்டுள்ளது.
சீனாவின், பீஜிங்கில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக சற்று நேரத்துக்கு முன்னர் செய்தி பரவியது. ஆனால், ஒரு பெண் தன்னைத் தானே கொளுத்திக் கொள்ள முயன்றதாகவும், இதுதான் வெடி விபத்து என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனவும் சீன அரசின் அதிகாரபூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிபட தகவல் தெரிவிக்க முடியவில்லை. ஆனால் தூதரகத்துக்கு அருகே இருந்தவர்களில் ஒருவர் ராய்டர்ஸிடம், ‘ஒரு வெடி விபத்து நடந்தது போன்ற சத்தம் கேட்டது’ என்றுள்ளார். ‘7 அல்லது 8 போலீஸ் வாகனங்கள் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே இருந்தது’ என இன்னொருவர் கூறியுள்ளார்.
மேலும் குளோபல் டைம்ஸ் இதழின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், வெடி விபத்து நடந்ததா என்பது குறித்து உறுதிபட தகவல் கூற முடியவில்லை என்று பதிவிட்டுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்து எந்தக் கருத்தும் இதுவரை சொல்லவில்லை.