சான் அண்டோனியாவில் உணவக கழிப்பறையில் பிறந்த குழந்தை

Jul 27, 2018, 12:20 PM IST
அமெரிக்காவில் உணவக கழிப்பறையில் பெண் ஒருவருக்கு எதிர்பாராமல் பிரசவம் நடந்தது.
அமெரிக்காவில் சிக் ஃபெல்லா உணவக நிறுவனத்தின் கிளை ஒன்று டெக்சாஸ் சான் அண்டோனியாவில் உள்ளது. ஜூலை 17-ம் தேதி இரவு  உணவக பணியாளர்கள், வேலை முடித்து வீடுகளுக்குத் திரும்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்தபோது, பெண் ஒருவர், கழிப்பறையை உபயோகிக்க அனுமதி கேட்டார். பணியாளர்கள் அவரை உள்ளே அனுமதித்தனர். 
 
சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவர் உள்ளே வந்தார். "உங்கள் மனைவி ஓய்வறையினுள் சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறார்," என்று கூறினார் உணவக மேலாளர். கழிப்பறையினுள் கணவர் சென்றபோது, மனைவி பிரசவ வேதனையில் துடிப்பதை பார்த்தார். அவர் தாங்கி பிடித்தபோது, குழந்தை வெளியே வந்தது. தொப்புள் கொடி, குழந்தையின் கழுத்தில் இருமுறை சுற்றியிருந்தது. மெதுவாக அதை அகற்றினார் பெண்ணின் கணவர். அது ஓர் அழகிய பெண் குழந்தை!
கிரேஸ்லின் மா வயலட் கிரிஃப்ளின் இப்படித்தான் பிறந்தாள். 
 
நிறைமாத கர்ப்பிணியான மேகிக்கு பிரசவ நேரம் நெருங்கியதை தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கணவர் ராபர்ட் கிரிஃப்ளின் ஆயத்தமானார். தங்கள் மகள்களை நண்பர் ஒருவரின் கவனிப்பில் விட்டு விட்டு செல்ல முடிவு செய்தனர். சான் அண்டோனியா, 'சிக் ஃபெலா' உணவகம் அருகே காத்திருப்பதாக நண்பர் கூறியிருந்தார். பிள்ளைகளை அங்கு விடும்போது, மேகிக்கு உடலில் ஏதோ அவஸ்தை.
 
உடனடியாக கழிப்பறைக்கு செல்ல வேண்டிய அவசியம். அப்போதுதான் மூடப்பட்டுக்கொண்டிருந்த உணவகத்திற்கு சென்று கழிப்பறையை பயன்படுத்த அனுமதி கேட்கிறார்.... அங்கு எதிர்பாராமல் குழந்தை பிறக்கிறது. மேகிக்கு உணவக பணியாளர்கள் உதவி செய்கின்றனர். அவசர சேவைக்கான எண்ணை அழைத்து மருத்துவ பணியாளர்களிடம் தாயையும் சேயையும் ஒப்படைத்தனர்.
தனது மகள் பிறந்ததை ராபர்ட் கிரிஃப்ளின் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்று லட்சம் பேருக்கு மேலானவர்கள் அதை 'லைக்' செய்துள்ளனர்.
'சிக் ஃபெலோ' உணவகமும் தங்கள் பக்கத்தில் அதை பதிவு செய்துள்ளது. உணவகத்தில் பிறந்ததன் காரணமாக குழந்தை கிரேஸ்லின் வாழ்க்கை முழுவதும் தங்கள் உணவகத்தில் கட்டணமின்றி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சந்தோஷமாக தெரிவித்துள்ள நிறுவனம், படித்து முடித்து வேலைக்கு வரும் தறுவாயில், விரும்பினால் தங்களிடம் பணிக்கு இணைந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
 
'உணவு வழங்குவதோடு பிரசவத்திற்கும் உதவுகிறோம்' (We not only deliver food, but we help deliver babies) என்று பெருமிதமாக கூறிக்கொள்கிறது 'சிக் ஃபெலோ'.

You'r reading சான் அண்டோனியாவில் உணவக கழிப்பறையில் பிறந்த குழந்தை Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை