பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

Jul 27, 2018, 10:23 AM IST

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு, இறுதியாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகைள எடுத்து வருகிறார். குறிப்பாக, சிபிஎஸ்இ இணையாக புதிய பாடத்திட்டம், புதிய தரத்தில் சீருடைகள், நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டு, இறுதியாண்டுக்கான தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கல்வியாண்டு தேர்வு தேதிகள் குறித்த முழு விவரம்:

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு- செப்டம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை, அரையாண்டு தேர்வு- டிசம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை, இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை.

9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை, காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை, அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை, இறுதித் தேர்வு- ஏப்ரல் 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை(9-ம் வகுப்பு மட்டும்).

செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரையில் காலாண்டு விடுமுறை காலமாகவும், டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாகவும், ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை கோடை விடுமுறை காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை