குழந்தை கடவுள் கொடுக்கும் பரிசு. அதனால், ஒவ்வொரு இந்துவும் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரபிரதேசம் மாநில பாஜ எம்எல்ஏ பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பரியா தொகுதியின் பாஜ எம்எல்ஏ சுரேந்திர சிங். இவர், அடிக்கடி சர்ச்சை கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் கூட, அடுத்தாண்டு நடைபெற இருக்கும் தேர்தல் இஸ்லாமியர்களுக்கும், இந்துவுக்கும் நடைபெறும் தேர்தலாக இருக்கும் என அவர் சமீபத்தில் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சுரேந்திர சிங் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “குழந்தைகள் கடவுள் கொடுக்கும் பரிசு. அதனால், இந்துக்கள் குறைந்தது 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா வலிமையடைய வேண்டும் என்றால் இந்துக்கள் வலிமை பெற வேண்டும். இந்துக்கள் சிறுபான்மையினராக மாறி வருவதால் இந்த நடவடிக்கை அவசியம்.
இவ்வாறு அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.