பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி: வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங்.

பாகிஸ்தானில் புதிய அரசு ஆட்சி செய்தாலும் இன்னும் ராணுவே ஆட்சியே நடக்கிறது

Sep 17, 2018, 22:48 PM IST

பாகிஸ்தானில் புதிய அரசு ஆட்சி செய்தாலும்  இன்னும் ராணுவ ஆட்சியே நடக்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் பாகிஸ்தானில்  புதிய அரசு பொறுப்பேற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் பாகிஸ்தானின் புதிய  பிரதமாராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால் எல்லை பகுதிகளில் தொடர்ந்து ஊடுருவல் சம்பங்கள் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.

 இந்நிலையில் இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் தெரிவித்தாவது

" பாகிஸ்தானில் இன்னும் ராணுவமே ஆட்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் அரசு ராணுவத்தின்  கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் கொள்கை மிக தெளிவாக உள்ளது. அதற்கான சூழ்நிலை பலனளிக்கும் வகையில் இருக்கும்போது பேச்சுவார்த்தை நடைபெறும்" என அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி: வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங். Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை