வந்துவிட்டது புது மெட்ரோ ரயில்!

by Mari S, Sep 17, 2018, 22:40 PM IST

ஹரி இயக்கத்தில், 2003ல் வெளியான சாமி படத்தின் தொடர்ச்சியாக சாமி ஸ்கொயர் படத்தை ஹரி இயக்கியுள்ளார்.

சாமி படம் செய்த மேஜிக்கை சாமி ஸ்கொயர் செய்யுமா என்பது வரும் 21ம் தேதி தெரிந்துவிடும். சாமி ஸ்கொயர் படம் செப்.,21ல் ரிலீசாகவுள்ள நிலையில், அதன் புரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள ‘புது மெட்ரோ ரயில்’ பாடல் விடியோவை தற்போது, சோனி மியூசிக் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விக்ரம் & கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகாக இந்த பாடலில் காட்சியளிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில், எனர்ஜெடிக் மற்றும் அதிவேக ரயிலாக இந்த புது மெட்ரோ ரயில் பாடல் உள்ளது. ‘புது மெட்ரோ ரயில்’ பாடல் சென்னை மெட்ரோ ரயிலில் படமாக்கப்படும் என்று பார்த்தால், முற்றிலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு, கண்களுக்கு கலர் விருந்தினை படைத்துள்ளது.

விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷின் ஆடைகளும் புதுவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது பாடலுக்கு கூடுதல் பலமாகவே உள்ளது.

சாமி ரசிகர்களுக்கு தீனிப் போடுமா சாமி ஸ்கொயர் என்பது வரும் வெள்ளியன்று தெரிந்து விடும்!

You'r reading வந்துவிட்டது புது மெட்ரோ ரயில்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை