சிங்கப்பூர் அரசின் தடை? இப்படியலாமா விளம்பரம் தருவிங்க!

by Manjula, Sep 21, 2018, 16:06 PM IST

வீடு மற்றும் கடையில் வேலை செய்ய இந்தோனேசியர்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை தடை செய்துள்ள சிங்கப்பூர் அரசு, சட்ட ரீதியாகவும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரில் வீடு மற்றும் கடைகளில் வேலையாளாக பணியாற்றுவது இந்தோனேசியர்கள்தான். அங்கு நிலவும் வறுமை காரணமாக சிங்கப்பூரை அவர்கள் நாடி வருகின்றனர். மற்ற நாடுகளை போல இல்லாமல் கடுமையான தொழிலாளர் சட்டங்களை கொண்ட சிங்கப்பூர் அரசு, வேலையாட்களுக்கு தேவையான வசதிகள் மற்ற நாடுகளை விட அதிகமாகவே கிடைக்கும்.

சிங்கப்பூர் தொழிலாளர் சட்டம்  அனைத்து வகையான ஊழியர்களுக்கும் அடிப்படை விதிமுறைகள் மற்றும் பணி உரிமைகளை சமமாக ழங்குகிறது. இந்த சட்டம்  சில விதிவிலக்குகளுடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது.  

இந்நிலையில், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று ‘இந்தோனேசிய பணியாளர்கள் விற்பனைக்கு’ என சமீபத்தில் விளம்பரம் செய்துள்ளனர். இது தொடர்பான புகார் அரசுக்கு சென்ற நிலையில், அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை அரசு தடை செய்துள்ளது. மேலும் இனி இதுபோல் நடக்காமல் இருக்கவும் சிங்கப்பூர் அரசு சட்ட ரீதியான நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது.

 

You'r reading சிங்கப்பூர் அரசின் தடை? இப்படியலாமா விளம்பரம் தருவிங்க! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை