அமெரிக்காவில் உணக பணியாளர் ஒருவர் வாடிக்கையாளருக்கு வழங்கிய வேண்டிய பீட்சாவில் எச்சில் துப்பி, அதை ஷாஸ் கொண்டு மறைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இந்த வீடியோவில் உள்ளவர் கெர்லி என தெரியவந்தது. இந்த வீடியோவைப்பார்த்த உணவக உரிமையாளர் உடனடியாக அவரை வேலையில் இருந்து நீக்கியதோடு, போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கெர்லி ஒரு நல்ல நோக்கத்துக்காக இந்த வீடியோவை வெளியிட்டதாக அவருடன் வேலை செய்யும் மே என்பவர் தெரிவித்தார். இதுகுறித்து மே கூறுகையில், ‘கெர்லி ஒரு நல்ல நோக்கத்துக்காகத்தான் இந்த செயலை செய்தார். ஆனால் அது அவருக்கே வினையாக முடிந்தது. முன்பு பல பணியாளர்கள் இது போல கேவலமான செயலை செய்துள்ளனர். அதை மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த தான் இது போல வீடியோ பதிவு செய்து அதை வெளியிட்டார். ஆனால் இதை மேனேஜர்கள் கேட்க தயாராக இல்லை.’ என்றார். எது எப்படியோ இனிமேல் பீட்சா சாப்பிடனும்னா கொஞ்சம் யோசிக்கனும்.