இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மற்றும் மேற்கு சுலவேசி பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து அந்நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
7.5 என்ற ரிக்டா் அளவுகோல்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தொிவித்துள்ளது.
மேலும் சக்தி வாய்ந்த நிலநடுத்தகத்தில் அங்குள்ள வீடுகள் சேதமடைந்துள்ளனா். இதில் ஒருவா் உயிாிழந்துள்ளதாகவும், 10 போ் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
முன்னதாக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி சுமாா் 500 போ் உயிாிழந்த நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.