இந்தியா இதில் மட்டும் மன்னன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சனம்.

Advertisement

இந்தியாவை வரிவிதிப்பதில் மன்னன் என குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக உடனடியாக வர்த்தகம் ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தியா விரும்புவதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கே முதன்மை என்ற வர்த்தகக் கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப் பிற நாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்படாத நிலையில் அந்த நாடுகளோ அமெரிக்கப் பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரி விதிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.

மேலும் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பதை அந்நாடு விரும்பவில்லை என்றும், இதற்காக இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் நேற்றுமுன்தினம் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுடன் திருத்தியமைக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை அறிவிப்பதற்காக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.

கனடா மெக்சிக்கோவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவுடனும் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சு நடைபெற்று வருவதாக அவர் கூறினார். ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் மீது இந்தியா மிக அதிக வரி விதிப்பதாகவும் வரி விதிப்பதில் இந்தியா மன்னன் என்றும் டிரம்ப் அப்போது விமர்சித்தார்.

இந்தியாவுடன் நல்ல உறவு இருப்பதாகவும், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என இந்தியாவே அழைத்ததாகவும், அமெரிக்கா இந்தியாவை அழைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக உடனே பேச்சுவார்த்தையை தொடங்க இந்தியா விரும்புவதாகவும்,தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள நினைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
/body>