TNPSC போன்ற அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற?

TNPSC போன்ற அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற தினமும் தெரிந்துகொள்வேம்

by Manjula, Oct 2, 2018, 12:17 PM IST

தமிழகம்


1.தமிழகத்தில் வேதாந்தா குழுமம் 2 இடங்களிலும், மத்திய் அபொதுத் துறை நிறுவ்னமான ஓஎன் ஜீ ஒரு இடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


2. மதுரை விமான நிலையம் ரூ700 கோடியில் விவிவாக்கம் செய்யப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை செயலர் ஆர்.என்.செளபே தெரிவித்தார்

இந்தியா:
1. ஆந்திர பிரதேச மானிலத்தில் வேலையில்லா இளைங்ஞர்களுக்கு மாதாம் ரூ1000 உதவித் தொகை வழங்கும் திட்டம். முதல் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.


2. பன்னாட்டு நிதியத்தின் (IMF) புதிய தலைமை பொருளாதர நிபுணராக ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் கீதா கோபினாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. முதல் முறையாக குடிமைப்பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலகிக் கொள்ள அனுமதிப்பதற்கு மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம்(UPSC) முடிவு செய்துள்ளது.

உலகம்:

1.புற்று நோய் மருத்துவத்தில் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் அலிஸன் மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி டாஸுகு ஹோஞ்சோ ஆகிய இருவரும் நிகழாண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும், புற்று நோய் அணுக்களை நேரடியாக அழிக்கும் சிகிச்சை முறைக்கு மாற்றாக, நமது உடலில் இயற்கையாக அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டே அந்த அணுக்களை அழிப்பதற்கான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக் குழு திங்கள்கிழமை தெரிவித்தது.

2.இந்தியா வந்துள்ள உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மார்சியோயெவ் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகள் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு உள்பட 17 முக்கிய ஒப்பந்தங்கள் இடையே கையெழுத்தாயின.

விளையாட்டு:

  1. 1.ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக மொகமது முஷ்டாக் அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  2. 2.ரஷ்ய கால்பந்து அணியின் கேப்டனும் கோல்கீப்பருமான இகோர் அகின்பீவ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

வர்த்தகம்:

  1. 1.நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் சென்ற செப்டம்பரில் ரூ.94,442 கோடியாக உயர்ந்துள்ளது.
  2. 2.நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஐஎல் & எஃப்எஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை மத்திய அரசு  கையிலெடுத்தது.
  3. 3.முக்கிய எட்டு துறைகள் உற்பத்தி வளர்ச்சி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 4.2 சதவீதமாக குறைந்தது.

முக்கிய தினம்

  1. சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினம்
  2. மகாத்மா காந்தி பிறந்த தினம்(1869)
  3. இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்(1904)
  4. தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு தினம்(1975)

You'r reading TNPSC போன்ற அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை