துருவ கரடிகள் அழியும் அபாயம்: ஆர்ட்டிக்கில் பனிப்பாறைகள் உருக்கம்!

Polar Bear extinction Glaciers melting

by Devi Priya, Dec 6, 2018, 17:04 PM IST

ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதால் அறியவகை உயிரினமான துருவக் கரடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய வெப்பமயமாதல் அதிகரித்துள்ளதால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் அதிகரித்துள்ளது என்றும், இது உலகம் முழுவதும் பருவநிலையில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, பனிப்பாறைகள் எளிதில் உடைந்துவிடுகின்றன. இதனால் அறியவகை உயிரினமான துருவக் கரடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015-2018 வரையிலான ஆண்டுகள் மிக அதிக வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. மேலும், இந்த நிலை நீடித்தால் 2100ம் ஆண்டில் 3-5 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலக வெப்பமயமாதலுக்கு கடல் மட்டம் உயர்வு, பெருங்கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பது, பனிப்பாறைகள் உருகுவது உள்ளிட்டவையே உதாரணங்களாக கூறப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆராய்ச்சி வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

You'r reading துருவ கரடிகள் அழியும் அபாயம்: ஆர்ட்டிக்கில் பனிப்பாறைகள் உருக்கம்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை