சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

Dec 6, 2018, 16:49 PM IST

ராஜமவுலி தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து ராமாயணத்தை மையப்படுத்தி ஒரு படம் இயக்கி வருகிறார் அதில் சீதையாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை ஆனால் இந்தபடத்தை ஆர்.ஆர்.ஆர் என்றே அழைக்கின்றனர்.

’ராம ராவண ராஜ்யம்’ என்று இந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ராம்சரண் ராமனாகவும் ஜூனியர் என்.டி.ஆர் ராவணனாகவும் நடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கனவே பிரியாமணி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியிருந்தது. இப்போது கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கும் பிரம்மாண்டப் படம் என்பதால் கீர்த்தி சுரேஷ் சீதையாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை