ஃபிளிப்கார்ட்டில் தொடங்கியது பிக் ஷாப்பிங் டேஸ் - 3 நாட்களுக்குள் மொபைல் போனை அள்ளுங்க!

flipkart big shopping days amazing smart phones

Dec 6, 2018, 17:07 PM IST

புத்தாண்டை முன்னிட்டு, ஃபிளிப்கார்ட் தளத்தில் அதிரடி ஆஃபர்களுடன் பிக் ஷாப்பிங் டேஸ் சிறப்பு விற்பனை துவங்கியிருக்கிறது.தீபாவளியை முன்னிட்டு பிக் பில்லியன் சேல் களைகட்டிய நிலையில், தற்போது வரும் ஆங்கில புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு ஃபிளிப்கார்ட் இணையதளத்தில், சிறப்பு விற்பனையில் போகோ எஃப்1, மோட்டோ X4, மோட்டோரோலா ஒன் பவர், ஹானர் 10, அசுஸ் சென்ஃபோன் 5இசட், கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL, எல்.ஜி. ஜி7 தின்க் போன்ற ஸ்மார்ட்போன்கள் அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், இஎம்ஐ எனப்படும் எளிய மாத தவணை முறை வசதி, எக்சேஞ்ச் சலுகை உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சிறப்பு விற்பனை இன்று (நவம்பர் 6) துவங்கி நவம்பர் 8ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் கூகுள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,000 தள்ளுபடி மற்றும் பழைய ஸ்மார்ட்போனினை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனையில் ரூ.18,000 வரை விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.36,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும், ஸியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் விலை ரூ.3,000 குறைக்கப்பட்டு ரூ.25,999 விலையில் விற்பனைக்கு . இதனுடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை கூடுதல் தள்ளுபடி ஆஃபர் இந்த போனுக்கும் வழங்கப்படுகிறது.

ஷேட்டர் கிளாஸ் பாதுகாப்பு அம்சம் கொண்ட மோட்டோ ஸி2 ஃபோர்ஸ் போனின் விலை ரூ.34,999ல் இருந்து ரூ. 18,999க்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஸ்நாப் டிராகன் 850 எனும் அதிகபட்ச புராசஸர் வழங்கப்படுகிறது.

இதுபோல, மேலும், பல ஸ்மார்ட் போன்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனால், டிசம்பர் 6,7 மற்றும் 8 ஆகிய மூன்று தேதிகளில் மொபைல் போனை வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகை கிடைக்கும்.

You'r reading ஃபிளிப்கார்ட்டில் தொடங்கியது பிக் ஷாப்பிங் டேஸ் - 3 நாட்களுக்குள் மொபைல் போனை அள்ளுங்க! Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை