Jun 6, 2020, 15:59 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் மக்கள் திண்டாடி வருகின்றனர். மும்பையில் சிக்கிக்கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களில் நூற்றுக்கணக்கானவர்களை மீட்டுத் தனி விமானத்திலும், பஸ்களிலும் சொந்த ஊருக்குக் கடந்த வாரங்களில் அனுப்பி வைத்தார் நடிகர் சோனு சூட். Read More
Jun 6, 2020, 14:45 PM IST
கொரோனா தொற்று காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்குக் கடந்த 4 நாட்கள் முன்பாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. Read More
Jun 6, 2020, 14:40 PM IST
சூரத் நகரில் ஜவுளி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விற்பனை மந்தமாக உள்ள நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையால் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சீன வைரஸ் நோயான கொரோனா, உலக நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் 2.36 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 6, 2020, 14:36 PM IST
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை 80,229 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலில் சீனாவை நெருங்கியிருக்கிறது இந்த மாநிலம். இந்தியாவில் இது வரை 2 லட்சத்து 36,657 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில், ஒரு லட்சத்து 14,073 பேர் குணமடைந்துள்ளனர். 6642 பேர் பலியாகியுள்ளனர். Read More
Jun 6, 2020, 14:31 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் சீனாவே கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், உலகத்திற்கு இந்த மோசமான பரிசை அந்த நாடு கொடுத்து விட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். Read More
Jun 6, 2020, 10:46 AM IST
இந்தியா, சீனா எல்லையில் போர் பதற்றத்தைக் குறைக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் தவித்துக் கொண்டிருக்க, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
Jun 6, 2020, 10:38 AM IST
நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கும் படம் சூரரைப் போற்று. இதில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். மாதவன், ரித்திக்கா சிங் நடித்த இறுதிச் சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கி உள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கிறது. Read More
Jun 6, 2020, 10:21 AM IST
லாக் டவுனில் நடிகைகள் வீட்டில் முடங்கியிருக்கின்றனர். காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் போன்ற சில நடிகைகள் சமையல் அறைக்குள் நுழைந்து வகை வகையான இனிப்புகள் செய்து அசத்துகின்றனர். தாங்கள் இனிப்பு தயாரிப்பதை வீடியோவாக வெளியிட்டு மகிழ்கின்றனர் Read More
Jun 6, 2020, 10:12 AM IST
காபில், கேலண்டர் கேர்ள்ஸ், அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் ரோஹித் ராய், இந்தி டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கொரோனா லாக்டவுனில் ஜோக் சொல்வதாகக் கூறி வெளியிட்ட ஒரு மெசேஜ் அவரை பிரச்சனைக்குள் சிக்க வைத்திருக்கிறது. Read More
Jun 6, 2020, 10:03 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரை 28,694 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் புதிதாகக் குறைந்தது 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. Read More