நடிகை பூஜா ஹெக்டே புது கை வண்ணம்..

by Chandru, Jun 6, 2020, 10:21 AM IST

லாக் டவுனில் நடிகைகள் வீட்டில் முடங்கியிருக்கின்றனர். காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் போன்ற சில நடிகைகள் சமையல் அறைக்குள் நுழைந்து வகை வகையான இனிப்புகள் செய்து அசத்துகின்றனர். தாங்கள் இனிப்பு தயாரிப்பதை வீடியோவாக வெளியிட்டு மகிழ்கின்றனர். இந்த பட்டியலில் பூஜா ஹெக்டேவும் இணைந்திருக்கிறார். புதுவகையான பாம்பே ஸ்வீட் தயாரித்துப் பகிர்ந்தார்.


பூஜா ஹெக்டே அல வைகுந்த புரம்லூ தெலுங்கு படத்தில் நடித்து புட்ட பொம்மா.. பாடல் மூலம் பிரபலமானார். அப்பாடலுக்குத் தனது கால் வண்ணத்தைக் காட்டியவர் தற்போது இனிப்பு செய்து கை வண்ணம் காட்டியிருக்கிறார். ஏற்கனவே இதே போல் கேரட் அல்வா, பீட்ஸா செய்துகாட்டி ரசிகர்கள் நாவில் எச்சில் ஊறவிட்டார். ஒரு தேர்ந்த செஃப் ஆகவே பூஜா மாறிவிட்டதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.


More Cinema News