நடிகை தமன்னாவிடம் இணைய தளத்தில் ரசிகர் ஒருவர், உங்களின் நெருங்கிய தோழி யார்?என்று கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தார். அவர் கூறும்போது,எனது நெருங்கிய தோழி ஸ்ருதிஹாசன். மும்பையில் நானும் அவரும் ஒரே பகுதியில் வசித்தோம். அப்போதிலிருந்தே நாங்கள் நெருங்கிய தோழிகள் தான். என் மீது எப்போதும் அக்கறை எடுத்துக் கொள்வார்.
இப்போது கூட ஒரு குழந்தையைப்போல் என் மீது அக்கறை காட்டுவார் என்று கூறிய தமன்னா மேலும் தொடர்ந்தார் திரைப்படத்தைப் பொறுத்த வரை காத்திருந்து நல்ல வேடங்களாகத் தேர்வு செய்து நடிக்கிறேன். நான் நடிகையானதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன் என்றார்.தமன்னாவுக்கு தற்போது தமிழில் படம் எதுவும் இல்லை. தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி கோச் ஆக நடித்து வருகிறார்.